மாநில அளவிலான கைப்பந்து போட்டி: இந்தியன் வங்கி அணி வெற்றி

May 16, 2019 01:20 PM 72

கோவை பெரியநாயக்கன் பாளையத்தில் உள்ள உள்விளையாட்டு அரங்கில் மாநில அளவிலான 51-வது ஆண்டு கைப்பந்து விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன.

டெக்ஸ்மோ கோப்பைக்காக ஆண்டுதோறும் இங்கு கைப்பந்து விளையாட்டு போட்டிகள் நடத்தப்படுவது வழக்கம். அந்த வகையில் பெரிய நாயக்கன்பாளையத்தில் உள்ள வெங்கட கிருஷ்ணன் உள்விளையாட்டு அரங்கில் போட்டிகள் துவங்கப்பட்டது. அக்வா குரூப் நிறுவனரும், கைப்பந்து வீரருமான ராமசாமி நினைவாக போட்டிகள் நடத்தப்பட்டன.

5 நாட்கள் நடைபெறும் இந்த போட்டியில் 30 அணிகள் பங்கேற்றன. இதில் நடைபெற்ற முதல் போட்டியில் இந்தியன் வங்கி 3 க்கு பூஜ்ஜியம் என்ற நேர்செட்டுகளில் சுங்கத்துறை அணியை வீழ்த்தியது. 2-வது போட்டியில் எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழக அணி 3க்கும் 1 என்ற கணக்கில் அக்வா ஸ்போர்ட்ஸ் கிளப் அணியை தோற்கடித்தது.

Comment

Successfully posted