இந்திய அணி கேப்டன் விராட் கோலி நம்பிக்கை

Aug 13, 2018 12:16 PM 411
இந்தியா- இங்கிலாந்து இடையேயான 2வது டெஸ்ட்  கிரிக்கெட் போட்டியில், இந்திய அணி இன்னிங்ஸ் தோல்வியை தழுவியது. இதனால் 5 போட்டிகள் கொண்ட தொடரில், 2க்கு 0 என்ற கணக்கில் இந்திய அணி பின்தங்கியுள்ளது. இந்நிலையில் முதுகு வலி காரணமாக அவதிப்பட்டு வந்த, விராட் கோலி 3வது டெஸ்ட் போட்டிக்குள் தனக்கு உடல்நிலை சரியாகிவிடும் என கூறியுள்ளார். அதிக போட்டிகள் மற்றும் வேலைப் பளு காரணமாக, முதுகு வலி பிரச்சனை அடிக்கடி ஏற்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். 3வது டெஸ்ட் போட்டி 18 ஆம் தேதி நடைபெறும் என்பதால், அதற்குள் உடல்  அதற்குள் முதுகு வலி பிரச்சினை தீர்ந்து விடும் என்று கோலி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
 

Comment

Successfully posted