பாராலிம்பிக்கில் 19 பதக்கங்களை வென்று இந்தியா வரலாற்று சாதனை

Sep 05, 2021 07:35 PM 8156

டோக்கியோ பாராலிம்பிக் போட்டியில், இந்தியா 5 தங்கம், 8 வெள்ளி, 6 வெண்கலம் என, 19 பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளது.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில், கடந்த 24ஆம் தொடங்கிய 16-வது பாராலிம்பிக் போட்டி, இன்று மாலையுடன் நிறைவடைகிறது.

இந்நிலையில், இன்று காலை நடைபெற்ற பேட்மிண்டன் ஆடவர் ஒற்றையர் பிரிவில், இந்திய வீரர் கிருஷ்ணா நாகர் தங்கப் பதக்கத்தை கைப்பற்றி அசத்தினார்.

இறுதிப் போட்டியில், ஹாங்காங் வீரர் மான் கையை சந்தித்த அவர், 21 க்கு 17, 16 க்கு 21, 21 க்கு 17 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார்.

முன்னதாக நடைபெற்ற மற்றொரு பிரிவு போட்டியில், இந்தியாவின் சுகாஷ் யத்திராஜ் வெள்ளிப் பதக்கத்தை வென்றார்.

இறுதிப்போட்டியில் பிரான்ஸ் வீரர் மசூர் லூகாஸ் சுகாஷ் யத்திராஜை 15-21, 21-17, 21-15 என்ற செட் கணக்கில் வீழ்த்தினார்.

இதன் மூலம், பாராலிம்பிக் போட்டியில் இந்தியா 5 தங்கம், 8 வெள்ளி, 6 வெண்கலம் என 19 பதக்கங்களை வென்று, வரலாற்று சாதனை படைத்துள்ளது.

Comment

Successfully posted