இந்திய வீரர்கள் முழு திறமையுடன் எதிர்கொள்வார்கள் - இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தூர்

Dec 14, 2019 05:44 PM 243

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை, இந்திய வீரர்கள் முழு திறமையுடன் எதிர்கொள்வார்கள் என இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தூர் தெரிவித்துள்ளார்.

இந்தியா - மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி, சென்னையில் நாளை நடைபெறுகிறது. இதற்காக இருநாட்டு வீரர்களும் சேப்பாக்கம் மைதானத்தில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர். பயிற்சிக்கு இடையே, இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தூர், செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் கே.எல் ராகுல் தற்போது சிறப்பாக விளையாடி வருவதாக கூறினார். மேற்கிந்திய தீவுகள் அணி ஒருநாள் போட்டிகளில் சிறந்த அணி என்றும், அவர்களை எதிர்கொள்ள இந்திய வீரர்கள் தாயாராகி வருவதாகவும் பயிற்சியாளர் விக்ரம் ரத்தூர் தெரிவித்தார். அடுத்த ஆண்டு நடைபெறும் இருபது ஓவர் உலகக் கோப்பை தொடரை கருத்தில் கொண்டு இந்திய வீரர்கள் தயாராகி வருவதாக பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தூர் கூறினார்.

Comment

Successfully posted