ஆசிய அளவிலான சிலம்பம் போட்டி: இந்திய அணி ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வென்றது

Apr 30, 2019 08:10 AM 817

கன்னியாகுமரியில் நடைபெற்ற ஆசிய அளவிலான சிலம்பம் சாம்பியன் ஷிப் போட்டியில் இந்திய அணி ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியுள்ளது.

உலக சிலம்ப கழகம் சார்பில் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில், ஆசிய அளவிலான சிலம்ப போட்டிகள் நடைபெற்றன. கடந்த நான்கு நாட்களாக நடைபெற்ற இந்த போட்டிகளில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்கள் மற்றும் நேபாளம், மலேசியா, பங்களாதேஷ், இலங்கை உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த 400க்கும் மேற்பட்ட வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொண்டு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர்.

இறுதிச்சுற்று போட்டியில் இந்திய அணி ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. போட்டிகளில் கலந்து கொண்ட விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

Comment

Successfully posted