இந்திய பயணிகளுக்கு நியூசிலாந்தில் தடை

Apr 08, 2021 10:46 AM 799

கொரோனா தொற்று அதிகரிப்பு காரணமாக இந்தியாவில் இருந்து வரும் பயணிகளுக்கு நியூசிலாந்து அரசு தடை விதித்துள்ளது.

இந்தியாவில் கடந்தாண்டு வந்த கொரோனாவின் முதல் அலையைக் காட்டிலும், தற்போது வந்துள்ள இரண்டாவது அலையின் தாக்கம் மிக அதிக அளவில் இருக்கிறது. இதன்மூலம் கொரோனாவின் மோசமான பாதிப்புக்கு ஆளான நாடுகளின் பட்டியலில், அமெரிக்கா, பிரேசிலைத் தொடர்ந்து இந்தியா 3-வது இடத்தில் நீடிக்கிறது. தொற்று அதிகரிப்பு எதிரொலியாக, இந்தியாவில் இருந்து வரும் பயணிகளுக்கு நியூசிலாந்து அரசு தடை விதித்துள்ளது. இந்தியாவில் இருந்து வரும் அனைத்து பயணிகள், சொந்த குடிமக்கள் உள்பட, அனைவருக்கும் நியூசிலாந்து வர தற்காலிகமாக அனுமதியில்லை என நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா தெரிவித்துள்ளார். இந்த தடை உத்தரவு, ஏப்ரல் 11 ஆம் தேதி முதல் ஏப்ரல் 28 ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

Comment

Successfully posted