சென்னையில் இந்தோனேஷியா நாட்டின் பாரம்பரிய உணவுகளின் திருவிழா

Apr 05, 2019 07:14 AM 76

இந்தோனேஷியா நாட்டின் பாரம்பரிய உணவுகளின் திருவிழா சென்னையில் முதல் முறையாக தொடங்கியுள்ளது. சென்னை அடையாறில் உள்ள தனியார் ஹோட்டலில் தொடங்கியுள்ள இந்த உணவு திருவிழா, 7 நாட்கள் நடைபெறுகிறது. இந்தோனேஷியக் குடியரசின் சுற்றுலாத்துறை அமைச்சகத்தின் கீழ் நடைபெறும் இந்த உணவுத் திருவிழாவில் மதிய உணவு மற்றும் இரவு உணவுகள் கிடைக்கும். இதில் இந்தோனேஷியா நாட்டின் பாரம்பரிய உணவுகளான சாலடுகள், இனிப்பு வகைகள் கிடைக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்தோனேஷியா நாட்டு உணவு கலைஞர்களை வைத்தே சமைப்பதால், அந்த நாட்டுக்கு சென்று சாப்பிட்டது போன்ற உணர்வு இருக்கும் என்றும் நிகழ்ச்சி ஏற்ப்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

Comment

Successfully posted