“வி டிரான்ஸ்பர்” சேவையை பயன்படுத்த தடை என தகவல்!

May 31, 2020 08:47 AM 1271

நெதர்லாந்தின் ஆம்ஸ்டெர்டாமை தலைமையிடமாக கொண்டு செயல்படும் “வி டிரான்ஸ்பர்” நிறுவனத்தின் சேவையை, உலகளவில் பல லட்சம் பேர் பயன்படுத்துகின்றனர். முக்கியமாக ஊரடங்கு காரணமாக வீடுகளில் இருந்து பணிபுரியும் ஊழியர்கள்,  “வி டிரான்ஸ்பர்”  மூலமாக அலுவல் தொடர்பான கோப்புகளை தங்கள் கம்ப்யூட்டரில் இருந்து மற்றொருவருக்கு அனுப்ப பயன்படுத்தி வருகின்றனர். இலவசமாக வழங்கப்படும் இந்த சேவை மூலம், அனைத்து வகை கோப்புகளையும் விரைவாக பகிர்ந்து கொள்ள முடியும். கட்டணம் செலுத்தி பயன்படுத்தும் முறையில் 20 ஜி.பி. தரவுகளைக்கூட, சுலபமாகவும் விரைவாகவும் அனுப்ப முடியும். இந்நிலையில், “வி டிரான்ஸ்பர்” சேவைக்கு மத்திய தொலைத்தொடர்பு துறை தடை விதித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நாடு முழுவதும் உள்ள இணையதள சேவை நிறுவனங்களுக்கு, கடந்த 18ம் தேதி அனுப்பப்பட்ட உத்தரவில், “வி டிரான்ஸ்பர்”  உள்ளிட்ட  சில இணையதள முகவரிகளை பயன்படுத்த வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

Comment

Successfully posted