ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று ஆஜராகி விளக்கம்

Jan 21, 2019 11:34 AM 278

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரித்து வரும் ஆறுமுகசாமி ஆணையத்தில், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று ஆஜரானார்.

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாக எழுந்த புகாரையடுத்து, அது குறித்து விசாரிக்க, ஆறுமுகசாமி ஆணையம் அமைக்கப்பட்டது. கடந்த ஓராண்டுக்கும் மேலாக நடைபெற்றுவரும் விசாரணையில், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் இல்லத்தில் பணியாற்றியவர்கள், பாதுகாப்பு மற்றும் தனிச் செயலர்களாக இருந்த அதிகாரிகள், மருத்துவ சிகிச்சை அளித்தவர்கள் உள்ளிட்டோரிடம் விசாரணை நடைபெற்றது. இந்நிலையில், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், விசாரணைக்கு ஆஜராகும்படி ஆறுமுகசாமி ஆணையம் சம்மன் அனுப்பியிருந்தது. அதன்படி, அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று ஆஜரானார்.

Comment

Successfully posted