கஜா புயலால் சேதமடைந்த வீடுகளுக்கு பதிலாக, புதிய கான்கிரீட் வீடுகள் - அமைச்சர் சி.விஜயபாஸ்கர்

Dec 10, 2018 07:40 AM 466

புதுக்கோட்டை மாவட்டத்தில் கஜா புயலால் சேதமடைந்த வீடுகளுக்கு பதிலாக, தமிழக அரசால் புதிய கான்கிரீட் வீடுகள் அமைத்துத் தர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

புதுக்கோட்டையில் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தமிழக அரசின் 27 வகையான நிவாரண பொருட்களை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழக அரசு மேற்கொண்ட தீவிர மீட்புப் பணியின் காரணமாக பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை திரும்பி உள்ளதாக கூறினார். போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை காரணமாக பொதுமக்களுக்கு மின்சாரம், குடிநீர், போக்குவரத்து உள்ளிட்ட அடிப்படை வசதிகள் 3 நாட்களுக்குள் வழங்கி சாதனை படைக்கப்பட்டதாக கூறிய அவர், சேதமடைந்த வீடுகளுக்கு பதிலாக புதிய கான்கிரீட் வீடுகள் அரசால் அமைத்துத் தர அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தெரித்தார்.

Comment

Successfully posted