டெல்லியில் பயங்கவரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை

Oct 24, 2019 06:48 AM 295

தலைநகர் டெல்லியில் உள்ள ராணுவ தலைமை அலுவலகங்கள், உளவுத்துறை அலுவலகங்கள் மீது தாக்குதல் நடத்த பயங்கவரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

தலைநகரின் முக்கிய இடங்களில் , ஜமாத் உத்தாவா, லஷ்கர் இ தொய்பா பயங்கவரவாத அமைப்பு அக்டோபர் மாத இறுதியில் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனையடுத்து, காவல் மற்றும் ராணுவ தலைமை அலுவலகங்கள், உளவுத்துறையான 'ரா' அமைப்பு அலுவலகங்களுக்கும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும், நாடு முழுவதும் பாதுகாப்பு படையினர் உஷார் படுத்தப்பட்டுள்ளதாக ராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.

Comment

Successfully posted