பொங்கல் பண்டிகையொட்டி ஜல்லிக்கட்டு காளைகளுக்கு தீவிர பயிற்சி

Dec 11, 2018 12:21 PM 491

பொங்கல் பண்டிகையொட்டி திருப்பரங்குன்றம் அருகே ஜல்லிக்கட்டு காளைகளுக்கு தீவிர பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

மதுரை மாவட்டத்தில் உள்ள அவனியாபுரம், பகுதியில் தை பொங்கல் அன்று முதல் ஜல்லிகட்டு ஆரம்பமாகும். இதனையடுத்து உலக புகழ் பெற்ற அலங்காநல்லூர், பாலமேடு மற்றும் சுற்றுப் பகுதிகளிலும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும். இந்நிலையில் ஜல்லிக்கட்டு போட்டிக்கான ஏற்பாடுகளை அவனியாபுரம் தென்கால் பாசன விவசாயிகள் சங்கம், கிராம கமிட்டியினர் செய்து வருகின்றனர். இந்நிலையில் அவனியாபுரம் அலங்காநல்லூர், பாலமேடு பகுதிகளில் ஜல்லிக்கட்டு காளைகளுக்கு கண்மாய்களில் நீச்சல் பயிற்சியும் மைதானங்களில் ஓட்டமும், மண்குவியலில் கொம்புகளால் மண் குத்துதல் உள்ளிட்ட பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன.

Comment

Successfully posted