எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க பணிகள் தீவிரம்

Sep 21, 2019 10:25 AM 240

 

மதுரை மாவட்டம் தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையவுள்ள இடத்தில் சாலை விரிவாக்கப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

மருத்துவமனை அமைக்க மத்திய அரசு ஆயிரத்து 264 கோடி நிதி ஒதுக்கியுள்ளது. இதற்காக 199.98 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டது. இதையடுத்து கடந்த ஜனவரி மாதம் பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். தற்போது, எய்ம்ஸ் மருத்துவமனை பணிக்காக கூத்தியார்குண்டு விளக்கிலிருந்து கரடிகல் வரையிலான ஒரு வழி சாலையை, இருவழி சாலையாக மாற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. கட்டுமான பணிகள் விரைவில் துவங்கும் என்றும் கூறப்படுகிறது.

Comment

Successfully posted