சர்வதேச போதை பொருள் ஒழிப்பு நடவடிக்கை : ரூ.1300 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல்

Dec 14, 2019 12:52 PM 434

சர்வதேச அளவில் நடைபெற்ற போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையில் ரூ.1,300 கோடி மதிப்பிலான போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது...

இந்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு, ஆஸ்திரேலிய அதிகாரிகளுடன் இணைந்து சர்வதேச அளவிலான போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டது. இந்த சோதனையில், இந்தியாவில் இருந்து 20 கிலோ கோகைன் மற்றும் ஆஸ்திரேலியாவில் இருந்து 55 கிலோ கோகைகன் மற்றும் 200 கிலோ மெதாமெபிடமைன் ஆகிய போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கில், இந்தியாவை சேர்ந்த 5 பேர் உட்பட அமெரிக்காவை சேர்ந்த ஒருவர், நைஜீரியாவை சேர்ந்த 2 பேர் மற்றும் இந்தோனேசியாவை சேர்ந்த ஒருவர் என மொத்தம் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் பறிமுதல் செய்யப்பட்டுள்ள போதைப்பொருட்களின் மொத்த மதிப்பு 1,300 கோடி ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது.

Comment

Successfully posted