அதிமுக வேட்பாளர்கள் நேர்காணல் : தலைமை கழகத்தில் விழாக் கோலம்!

Mar 04, 2021 10:50 AM 2135

சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விருப்பம் தெரிவித்து மனு அளித்தவர்களிடம் ஆட்சி மன்ற குழு நேர்காணல் நடத்தி வருகிறது.

கடந்த 8 நாட்களாக விருப்ப மனுக்கள் வழங்கப்பட்டு வந்த நிலையில், 8 ஆயிரத்து 200-க்கும் அதிகமானோர் விருப்ப மனு அளித்துள்ளனர். இதையடுத்து, சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நேர்காணல் நடைபெற்று வருகிறது. நேர்காணலில் பங்கேற்பவர்கள் விருப்ப மனு பெற்றதற்கான அசல் ரசீதுடன் தலைமை கழகத்தில் காலை முதல் குவிய தொடங்கினர். இதனால், அதிமுக தலைமை கழகம் களைகட்டியிருந்தது. காலை முதல் பிற்பகல் வரையில் ஒரு கட்டமாகவும், பிற்பகல் முதல் இரவு வரை என 2 பிரிவுகளாக நேர்காணல் நடைபெறுகிறது. கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, துணை ஒருங்கிணைப்பாளர்கள் முனுசாமி, வைத்திலிங்கம் உள்ளிட்டோர் அடங்கிய ஆட்சி மன்ற குழு விருப்ப மனு அளித்தவர்களிடம் நேர்காணல் நடத்தி வருகிறது.

 

Comment

Successfully posted