பாரத் பென்ஸ் BS-6 பஸ் மற்றும் கனரக வாகனங்கள் அறிமுகம்

Sep 12, 2019 08:49 AM 332

பாரத் பென்ஸ் நிறுவனத்தின் BS-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையான பஸ், டிரக்குகள் விற்பனைக்கு தயார் நிலையில் உள்ளன.

ஜெர்மனியை சேர்ந்த Daimler நிறுவனம் இந்தியாவில் Daimler India Commercial Vehicles (DICV) என்ற பெயரில் இந்தியாவில் வர்த்தக வாகன தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறது. மேலும், பாரத் பென்ஸ் பிராண்டில் தனது பஸ் மற்றும் கனரக டிரக்குகளையும் விற்பனை செய்து வருகிறது. பாரத் பென்ஸ் டிரக்குகள் சென்னையில் உள்ள ஆலையில்தான் உற்பத்தி செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது

இந்நிலையில் அடுத்த ஆண்டு முதல் BS-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையான எஞ்சின்களுடன் வாகனங்களை விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது . அதன்படி, தனது டிரக்குகளுக்கு BS-6 மாசு உமிழ்வு தரத்திலான எஞ்சின்களை டெய்ம்லர் இந்தியா நிறுவனம் உருவாக்கி இருக்கிறது. இந்த எஞ்சின்களுக்கு BS-6 சான்றையும் பெற்றிருப்பதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.image

Comment

Successfully posted