அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் புதிய சிடி ஸ்கேன் இயந்திரம் அறிமுகம்

Nov 15, 2019 10:26 AM 127

அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் புதிய சிடி ஸ்கேன் இயந்திரம் மற்றும் அதிநவீன தீவிர சிகிச்சைப் பிரிவு கட்டிடம் ஆகியவற்றை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார்.

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு வருகை தந்த தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அங்கு, நிறுவப்பட்டுள்ள 1 கோடியே 58 லட்சம் ரூபாய் மதிப்புடைய அதிநவீன சிடி ஸ்கேன் இயந்திரம் தொடங்கி வைத்தார்.

மேலும், 100 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள அதிநவீன தீவிர சிகிச்சைப் பிரிவு கட்டிடத்தையும் அவர் திறந்து வைத்தார். இதனைத் தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அமைச்சர் விஜயபாஸ்கர் காது கேளாதவர்களுக்கான கருவியையும், மருத்துவர்களுக்கு நற்சான்றுகளையும் வழங்கி சிறப்பித்தார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் உமா மகேஸ்வரி மற்றும் அதிமுக நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

Comment

Successfully posted