குழந்தைகளின் ஆபாச வீடியோக்களை பகிர்ந்த நபர்களிடம் விசாரணை

Dec 13, 2019 01:35 PM 319

குழந்தைகள் மற்றும் பெண்களின் ஆபாச வீடியோக்களை சமூக வலைத்தளங்களில் பரப்பிய ஆயிரம் பேரின் விவரங்கள் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக ஏடிஜிபி ரவி தெரிவித்துள்ளார்.


ஆபாச வீடியோக்களை பகிர்ந்தது மற்றும் பதிவேற்றம் செய்தது தொடர்பாக சென்னை, செங்கல்பட்டு ,கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் பதிவேற்றம் மற்றும் பகிர்ந்ததாக பல ஐபி அட்ரஸ் அனுப்பப்பட்டுள்ளது. திருச்சியில் குழந்தைகளின் ஆபாச வீடியோக்களை முகநூலில் பதிவிறக்கம் செய்தது தொடர்பாக கிறிஸ்டோபர் என்பவர் கைது செய்யப்பட்டார். அவரது முகநூல் குழுவில் உள்ள 100 பேரிடமும் விசாரணை நடைபெற்று வரும் நிலையில், அவர்கள் அனைவரும் கைது செய்யப்படலாம் எனக் கூறப்படுகிறது. இந்த நிலையில், தமிழகம் முழுவதும் ஆயிரம் பேரிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருவதாக பெண்கள் மற்றும் குழந்தைகள் குற்றத்தடுப்பு பிரிவு காவல் துறை கூடுதல் இயக்குனர் ரவி தெரிவித்துள்ளார்.

Comment

Successfully posted