தோனி அவுட் ஆனாரா ? ஆக்கப்பட்டாரா? - வெடிக்கும் புதிய சர்ச்சை

May 13, 2019 02:59 PM 7863

ஐபிஎல் 12வது சீஸனின் இறுதி போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை ஒரு ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி 4-ஆவது முறையாக மும்பை கோப்பையை வென்றது.வெற்றி பெற்ற மும்பை அணிக்கு 20 கோடி ரூபாய் மற்றும் வெற்றி கோப்பையும், 2-ம் இடம் பிடித்த சென்னைக்கு 12 கோடியே 50 லட்சம் ரூபாய்க்கான காசோலையும் வழங்கப்பட்டது.

மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றிப் பெற்றாலும், சிஎஸ்கே தோல்விக்கு மிக முக்கியமான இரண்டு காரணங்கள் இருக்கிறது. அது ஆட்டத்தின் கடைசி ஓவரில் வாட்சன் ரன் அவுட்டானதும். அதற்கு முன்பு தோனி ரன் அவுட்டானதும்தான். இதில் தோனியின் ரன் அவுட் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

image

ஹர்திக் வீசிய 13-வது ஓவரில் இரண்டாவது ரன் எடுக்க முயன்றபோது எதிர்பாராதவிதமாக பந்தை எடுத்த இஷான் கிஷன் நேராக ஸ்டம்ப்பில் அடிக்க மொத்த டீமும் அதிர்ச்சியில் உறைந்தது.தோனி க்ரீஸ்ஸின் நுனியில் பேட்டை வைக்கவும், பந்து ஸ்டம்ப்பில் படவும் சரியாக இருந்தது. பல கேமரா கோணங்களில் பார்த்த பின்னர், மூன்றாவது அம்பயர் அவுட் கொடுத்தார். மூன்றாவது அம்பயர் கொடுத்த தீர்ப்பு தவறு என சென்னை ரசிகர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.இது வேண்டுமென்றே கொடுக்கப்பட்ட அவுட் என்று ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கொந்தளித்து வருகின்றனர்.

image


கிரிக்கெட் விதிபடி" Benefit of the doubt goes to batsmen" என்ற ஒரு வாசகம் இருக்கிறது.இதுபோன்று சரியாக கணிக்க முடியாத சூழலில் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாகத்தான் அம்பயர்கள் முடிவு எடுப்பார்கள். ஆனால், நேற்று தோனிக்கு எதிராக அவுட் கொடுக்கப்பட்டது.தோனியின் அவுட் விதிக்கு புறம்பானது ஒருதலை பட்சமான முடிவு என சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறார்கள்.

ஒரு வேளை தோனி அவுட் ஆகாமல் இருந்திருந்தால் வெற்றி கோப்பை சிஎஸ் கே அணிக்கு கிடைத்திருக்கும் என்று பெருமூச்சு விடுகிறார்கள் சென்னை அணி ரசிகர்கள்.

Comment

Successfully posted

Super User

True