பாகிஸ்தானில் நடந்து முடிந்த பொதுத் தேர்தலில் எந்தவொரு கட்சிக்கும் தனிப் பெரும்பான்மை பெறவில்லை. முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான்கானின் தெக்ரீஹ் இ இன்சாப் கட்சி 116 இடங்களை பிடித்து தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. இந்தநிலையில், சிறிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து, அக்கட்சி ஆட்சி அமைக்க உள்ளது. இதனிடையே புதிய உறுப்பினர்கள் பதவியேற்பதற்காக பாகிஸ்தான் நாடாளுமன்றம் இன்று கூடுகிறது. இதற்கான உத்தரவை அந்நாட்டு குடியரசு தலைவர் மம்னூன் உசேன் பிறப்பித்துள்ளார். சபாநாயகர் மற்றும் துணை சபநாயகர் பதவிக்கான தேர்வு நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.