சென்னை மற்றும் பல்வேறு இடங்களில் நேற்றிரவு முதல் விட்டு விட்டு மழை!

Dec 03, 2020 07:05 AM 611

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளுர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில், நேற்றிரவு முதல் விட்டு விட்டு மழை பெய்தது.

புரெவி புயல் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இலங்கையின் திரிகோணமலை அருகே புயல் கரையை கடந்த நிலையில், சென்னையின் போரூர், கிண்டி, மதுரவாயல், ஆலந்தூர், பெரம்பூர் மற்றும் மீனம்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்றிரவு கனமழை பெய்தது. திருச்சி, காஞ்சிபுரம், சிவகங்கை, விழுப்புரம், நாகப்பட்டினம் ஆகிய பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. காரைக்காலில் பலத்த காற்றுடன் 6 மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது.

Comment

Successfully posted