அமைச்சர்கள் தொடங்கி வைத்த கொரோனா நோய் தடுப்பு மையம் திறக்கப்படாத அவலம்

Jun 10, 2021 07:13 AM 2911

கோவை சர்க்கார் சாமக்குளத்தில் உள்ள ரங்கநாதர் பொறியியல் கல்லூரியில் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு, அமைச்சர்கள் சக்கரபாணி, ராமசந்திரன் ஆகியோர் கொரோனா நோய் தடுப்பு மையத்தை தொடங்கி வைத்தனர். ஆனால், இன்று வரை நோய் தடுப்பு மையம் திறக்கப்படாததால் அதிருப்தி அடைந்த பொதுமக்கள், அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளனர். இந்த நிலையில், மையத்தில் இதுவரை மருத்துவர்கள், செவிலியர்கள் நியமனம் செய்யப்படாமல் இருப்பதாகவும், அடிப்படை வசதிகள் இல்லாமல் நோய் தடுப்பு மையம் உள்ளதாகவும் அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

Comment

Successfully posted