இத்தாலியில் மேம்பாலம் இடிந்து விழுந்ததில் 35 பேர் பலி

Aug 15, 2018 12:48 PM 549

சுற்றுலா நகரமான ஜியோனோவில் உள்ள மேம்பாலத்தின்  ஒரு பகுதியை புதுப்பிக்கும் பணி நடைபெற்று வந்தது. இந்தநிலையில், அங்கு வீசிய  புயல் காற்றினால் பாலத்தின் ஒரு பகுதி முற்றிலுமாக இடிந்து விழுந்தது. இதில் பாலத்தின் மீது சென்று கொண்டிருந்த 30 மேற்பட்ட கார்கள் மற்றும் டிரக்குகள் அனைத்தும் அப்பளம் போன்று நொறுங்கின. வாகனங்களில் பயணம் செய்த 35 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். பலர் படுகாயம் அடைந்துள்ளனர். விபத்திற்குள்ளான வாகனங்களை அப்புறப்படுத்தும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

Comment

Successfully posted

Super User

ddr