பந்தளத்தில் இருந்து கிளம்பியது ஐயப்பனின் திரு ஆபரணங்கள்

Jan 14, 2020 01:12 PM 1178

சபரிமலை ஐயப்பனின் தங்க ஆபரணங்கள், பந்தளம் அரண்மனையில் இருந்து சபரிமலை நோக்கி நேற்று புறப்பட்டது. நாளை மாலை ஐயப்பனின் ஆபரணங்கள் சபரிமலையைச் சென்றடையும்.

சபரிமலை மகரஜோதி தரிசனத்தின் போது, ஐயப்பனுக்கு தங்க ஆபரணங்கள் அணிவிக்கப்படும்.இந்த ஆபரணங்கள் ஆண்டு முழுவதும் பந்தளம் அரண்மனையில், சந்தனப் பெட்டிகளில் அடைத்து பாதுகாத்து வைக்கப்பட்டு இருக்கும். மகரஜோதி தரிசனத்தின் போது மட்டும் ஐயப்பனின் ஆபரணங்கள், சபரிமலைக்கு கொண்டு செல்லப்படும்.

இந்நிலையில், நாளை மகரஜோதி தரிசனம் நடைபெற உள்ளதை முன்னிட்டு, ஐயப்பனின் ஆபரணங்கள், பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பந்தளம் அரண்மனையில் இருந்து சபரிமலை நோக்கிக் கிளம்பியது.திருவாபரணங்கள் கொண்டுவரப்படும் வழிகளில் எந்த வித அசம்பாவித சம்பவங்களும் நடைபெறாமல் தடுக்க நூற்றுக்கணக்கான போலீசார் பத்தனம்திட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

ஐயப்பனின் திருவாபரணப் பெட்டிகள் செல்வதற்கு வசதியாக, நாளை பகல் 1 மணி முதல் மாலை 6.30 மணி வரை பம்பையில் இருந்து மலை ஏற பக்தர்களுக்கு அனுமதி இல்லை. அதேபோல், நாளை மாலை 6.00 மணி முதல் இரவு 7 மணி வரை பதினெட்டாம் படி வழியாக செல்லவும் பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

Comment

Successfully posted