பா.ஜ.க.வின் தேசிய தலைவராக ஜே.பி.நட்டா இன்று தேர்வாகிறார்

Jan 20, 2020 10:39 AM 163

பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவராக ஜே.பி.நட்டா இன்று ஏகமனதாகத் தேர்வு செய்யப்பட உள்ளார்.  

பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயல் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஜே.பி நட்டா, அந்தக் கட்சியின் தேசியத் தலைவராக இன்று தேர்வாகிறார்.

பா.ஜ.க தேசிய தலைவர் பதவிக்கான தேர்தல் குறித்து அந்தக் கட்சி அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது. அந்தக் கட்சியின் மூத்த தலைவரும், தேர்தல் பொறுப்பாளருமான ராதா மோகன் சிங் அது தொடர்பாக வெளியிட்ட அறிவிப்பில், தேசிய தலைவர் பதவிக்கு வரும் 20-ஆம் தேதி வேட்பு மனு தாக்கல் நடைபெறும் என்றும், தேர்தல் நடத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டால், மறுநாள் தேர்தல் நடத்தப்படும் என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், தேசிய தலைவர் பதவிக்கு ஜே.பி.நட்டா இன்று மனுத்தாக்கல் செய்கிறார். மேலும், அவரை எதிர்த்து யாரும் மனுத் தாக்கல் செய்ய முன்வரவில்லை. அதனால், ஜே.பி.நட்டா, பாரதிய ஜனதாக் கட்சியின் தேசியத் தலைவராக இன்று தேர்வாகிறார்.

Comment

Successfully posted