பாஜக தேசிய தலைவராக ஜெபி நட்டா தேர்ந்தெடுக்க வாய்ப்பு

Jan 18, 2020 07:22 AM 608

பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவராக, ஜெ.பி.நட்டா தேர்வு செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயல் தலைவராக உள்ள ஜெ.பி நட்டா, அந்தக் கட்சியின் தேசியத் தலைவராக தேர்வு செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

பா.ஜ.க தேசிய தலைவர் பதவிக்கான தேர்தல் குறித்து அக்கட்சியின் மூத்த தலைவரும், தேர்தல் பொறுப்பாளருமான ராதா மோகன் சிங் அறிவிப்பு வெளியிட்டார். அதில், தேசிய தலைவர் பதவிக்கு வரும் 20-ஆம் தேதி வேட்பு மனு தாக்கல் நடைபெறும் என்றும், அதைப்பொறுத்து தேர்தல் நடத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டால், மறுநாள் தேர்தல் நடத்தப்படும் என்றார்.

இந்நிலையில், தேசிய தலைவர் பதவிக்கு ஜெ.பி.நட்டாவை எதிர்த்து யாரும் போட்டியிடமாட்டார்கள் என்றும் அதனால், அவர் போட்டியின்றி 20-ம் தேதியே தேர்வு செய்யப்படுவார் என்றும் பா.ஜ.க வட்டாராங்கள் தெரிவிக்கின்றன.

Comment

Successfully posted