ஜல்லிக்கட்டு - கால்கோள் நடும் விழா விமரிசையாக நடைபெற்றது.

Jan 10, 2021 08:54 AM 6683

மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டி, வரும் 16ம் தேதி நடைபெறவுள்ள நிலையில், அதற்கான கால்கோள் நடும் விழா விமரிசையாக நடைபெற்றது.

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, உலகப் பிரசித்திபெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டி, வரும் 16ம் தேதி நடைபெறவுள்ளது. இதனை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தொடங்கி வைக்கவுள்ளனர். 14ஆம் தேதி அவனியாபுரத்திலும், 15ஆம் தேதி பாலமேட்டிலும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற உள்ளன. இந்தநிலையில், அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டிக்கான கால்கோள் நடும் விழா, வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் முன்னிலையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், சட்டமன்ற உறுப்பினர் மாணிக்கம், மாவட்ட ஆட்சியர் அன்பழகன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித்குமார், ஜல்லிக்கட்டு கமிட்டி மற்றும் கிராம மக்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

 

Comment

Successfully posted