ஜெயங்கொண்டம் அருகே கோலாகலமாக நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டி

Feb 19, 2020 02:32 PM 165

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு போட்டியில் சீறிப்பாய்ந்து வரும் காளைகளை மாடுபிடி வீரர்கள் ஆர்வத்துடன் அடக்கி வருகின்றனர்.

ஜெயங்கொண்டம் அருகே கீழமிக்கேல்பட்டியில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியில் சேலம், துறையூர், நாமக்கல், திருச்சி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 400க்கும் அதிகமான காளைகள் களமிறக்கப்பட்டன. வாடிவாசலில் இருந்து சீறிப்பாய்ந்த காளைகளை மாடுபிடி வீரர்கள் ஆர்வத்துடன் அடக்கி வருகின்றனர். போட்டியில் 300க்கும் அதிகமான மாடுபிடி வீரர்கள் பங்கேற்றுள்ளனர். போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களுக்கும், பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.

Comment

Successfully posted