ஜேம்ஸ் பாண்ட் டைட்டில் பாடல் வெளியானது!

Feb 17, 2020 12:06 PM 312

1953-ம் ஆண்டு இயன் ஃப்ளெமிங் உருவாக்கிய ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரம் உலகம் முழுவதும் பிரபலம். ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரத்தை அடிப்படையாகக் கொண்டு இதுவரை 24 படங்கள் வெளியாகியுள்ளது.

கடைசியாக வெளியான நான்கு பாண்ட் படங்களில் ஜேம்ஸ் பாண்டாக டேனியல் க்ரெய்க் நடித்திருந்தார். அடுத்ததாக வெளியாகவுள்ள 'நோ டைம் டு டை', படம் தான் ஜேம்ஸ் பாண்டாக க்ரெய் நடிக்கும் கடைசிப் படம் ஆகும். இப்படத்தை கேரி ஜோஜி இயக்கியுள்ளார். இப்படம் வரும் ஏப்ரல் 8-ம் தேதி வெளியாகவுள்ளது. சமீபத்தில் வெளியான இப்படத்தின் ட்ரெய்லர் இணையத்தில் நல்ல வரவேற்பைப் பெற்றது.

image

வழக்கமாக ஜேம்ஸ் பாண்ட் படங்கள் தொடங்கும்போது டைட்டிலில் ஒரு பாடல் இடம்பெறுவது வழக்கம். இந்தப் பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெறும். இதற்கு முன்னர் வெளியான படங்களில் இடம் பெற்ற இரண்டு பாடல்கள் சிறந்த பாடலுக்கான ஆஸ்கர் விருதுகளை பெற்றது.


அந்த வகையில் அடுத்த ஜேம்ஸ் பாண்ட் படமான ‘நோ டைம் டு டை’ படத்தில் இடம்பெறப் போகும் பாடல் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது. இப்பாடலை பிரபல பாப் பாடகி பில்லி ஈலிஷ் பாடியுள்ளார். அவரே தனது சகோதரர் ஃபீனியஸ் ஓ. கானலுடன் இணைந்து இப்பாடலை எழுதியிருக்கிறார்.ஜேம்ஸ் பாண்ட் பட வரலாற்றிலேயே டைட்டில் பாடலைப் பாடும் இளம் பாடகி பில்லி ஈலிஷ் என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் 5 கிராமி விருதுகள் இவருக்கு வழங்கப்பட்டன.

Comment

Successfully posted