காஷ்மீரில் பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்து கோர விபத்து: 11 மாணவர்கள் பலி

Jun 27, 2019 09:40 PM 217

காஷ்மீரில் பேருந்து ஒன்று பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், 9 மாணவிகள் உள்பட 11 மாணவர்கள் உயிரிழந்தனர்.

ஷோபியான் மாவட்டத்தின் மலைப்பகுதியில் மாணவ மாணவிகளை ஏற்றிக் கொண்டு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. பீர் கி கலி பகுதியில் சென்றபோது எதிர்பாராத விதமாக கட்டுப்பாட்டை இழந்த பேருந்து பள்ளத்தாக்கில் கவிந்து விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் 9 மாணவிகள் உள்பட 11 மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு படையினர் படுகாயமடைந்த 7 பேரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில், உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ள அம்மாநில ஆளுநர் சத்யபால் மாலிக் அவர்களின் குடும்பங்களுக்கு தலா 5 லட்ச ரூபாய் நிதியுதவி அறிவித்துள்ளார்.

 

Comment

Successfully posted