காலில் முறிவு அடைந்தும் வெற்றியை நோக்கி தவழ்ந்தே சென்ற ஜப்பான் பெண் - சமூக வலைதளங்களில் பாராட்டு

Nov 13, 2018 03:06 PM 314

 

ரிலே போட்டியில் பங்கேற்ற வீராங்கனைக்கு காலில் எழும்பு முறிவு ஏற்பட்ட நிலையிலும், வெற்றிபெற வேண்டும் என்ற எண்ணத்தில், தவழ்ந்தவாறே சென்று சக வீராங்கனையிடம் ரிப்பனை கொடுத்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

ஜப்பானில் நடைபெற்ற ரிலே போட்டியில் ரெய் லிடா என்ற வீராங்கனை பங்கேற்றார். பாதி தூரத்தை அவர் கடந்த நிலையில் திடீரென கீழே விழுந்தார். இதில் லிடாவுக்கு எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. இதனால் அவரால் எழுந்து ஓட முடியவில்லை.

இந்தநிலையில் தவழ்ந்தவாறே இலக்கை நோக்கி நகர்ந்த லிடா, அங்கு தயாராக காத்திருந்த சக வீராங்கனையிடம் ரிப்பனை கொடுத்தார். 200 மீட்டர் தூரம் வரை தவழ்ந்து சென்றதால் லிடாவின் முழங்கால்களில் இரத்தம் வடிந்தது. இதன் வீடியோவை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து லிடாவின் விடா முயற்சியை பலரும் பாராட்டி வருகின்றனர்.

Comment

Successfully posted

Super User

congratulations


Super User

Great


Super User

Courage of Women... Sportsmanship... Salute...


Super User

nothing is impossible