புரட்சித்தலைவி பிறந்தநாள் - தீபமேற்றி உறுதிமொழி ஏற்க தலைமை உத்தரவு!

Feb 24, 2021 07:26 AM 1858

புரட்சித் தலைவி ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு, தொண்டர்கள் அனைவரும் இன்று மாலை 6 மணிக்கு, விளக்கேற்றி உறுதிமொழி ஏற்க வேண்டும் என, அதிமுக தலைமை சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

இது குறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில்...

இன்னும் இரண்டே மாதங்களில் நாம் மீண்டும் ஒரு பரீட்சையை சந்திக்க உள்ளதாகவும், இதில் நல்லாட்சி பெற்ற மக்களும், நண்பர்கள் பலரும் நம் பக்கம் இருந்தாலும், எதிரிகளும், துரோகிகளும் கைக்கோர்த்துக் கொண்டு நமது படையை வீழ்த்த வேண்டும் என்ற எண்ணத்தோடு செயல்படத் துவங்கி இருப்பதாக கூறப்பட்டுள்ளது. 

அவர்களை நம் உழைப்பாலும், உத்வேகத்தாலும் ஒற்றுமை உணர்வாலும், மக்கள் மீதுள்ள நேசத்தாலும் பாடத்தை கற்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தக் குறிக்கோளோடு கழகக் கண்மணிகள் அனைவரும், புரட்சித் தலைவி ஜெயலலிதாவின் பிறந்தநாளான இன்று மாலை 6 மணிக்கு, தீபம் ஏற்றி, உயிர் மூச்சுள்ளவரை அம்மாவின் வழியில் மக்களையும், மக்களுக்கான இந்த அதிமுக இயக்கத்தையும் காப்பேன்; இது அம்மா மீது ஆணை என்ற உறுதிமொழியை எடுக்க வேண்டும் என, வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

Comment

Successfully posted