ஜெயலலிதா திறமை மிக்க பெண்மணி - குடியரசு துணைத் தலைவர் புகழாரம்

Oct 11, 2018 03:30 PM 392

ஜெயலலிதா திறமை மிக்க பெண்மணி - குடியரசு துணைத் தலைவர் புகழாரம்

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா திறமை மிக்க பெண்மணி என்று, குடியரசு துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடு புகழாரம் சூட்டியுள்ளார்.

சென்னை எத்திராஜ் மகளிர் கல்லூரியின் உள்விளையாட்டு பயிற்சி அரங்கிற்கு அவர் அடிக்கல் நாட்டினார். பின்னர் விழாவில் பேசிய வெங்கய்யா நாயுடு, ஜெயலலிதா திறமை மிக்கவர் என்று பாராட்டினார். ஆற்றல் மிக்க பெண்மணியாக அவர் திகழ்ந்ததை குறிப்பிட்ட அவர், தமிழும் தமிழ்நாடும் தமக்கு மிகவும் நெருக்கம் என்று அவர் கூறினார்.

தேசத்தை பெண்கள் கட்டமைக்க வேண்டும் என்று வலியுறுத்திய குடியரசு துணைத் தலைவர், பெண்கள் கல்வியில் இந்தியா தொடர்ந்து முன்னேற்றம் கண்டு வருவதை சுட்டிக் காட்டினார். அனைத்து துறைகளிலும் பெண்கள் சாதித்து வருவதாகவும், தாய்மொழி மட்டுமே வாழ்க்கை தரத்தை உயர்த்தும் என்றும் வெங்கய்யா நாயுடு தெரிவித்தார்.

Comment

Successfully posted

Super User

உண்மை அம்மா சிறந்த பெண்மணி தான்


Super User

thank you