திமுக-காங். ஆட்சியில், தமிழகத்திற்கு எந்த நலனும் செய்யவில்லை: அதிமுக வேட்பாளர்

Apr 15, 2019 11:57 AM 97

திமுக - காங்கிரஸ் ஆட்சியில், தமிழகத்திற்கு எந்த நலனும் செய்யப்படவில்லை என தென்சென்னை நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் ஜெயவர்தன் கூறியுள்ளார்.

சென்னை தியாகராய நகரில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டிருந்த போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், திமுக காங்கிரஸ் ஆட்சியில் தமிழகத்திற்கு எந்தவொரு நலத்திட்டமும் கொண்டு வரப்படவில்லை என கூறினார். காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்புக்காக காங்கிரஸ் திமுக ஆட்சியில் இருந்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காதது ஏன் என கேள்வி எழுப்பினார்.

இலங்கையில் தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட துரோகங்களை மக்கள் மறக்க மாட்டார்கள் எனவும் அவர் தெரிவித்தார்.

Comment

Successfully posted