சிங்கம்புணரியில் ஆசிரியர் வீட்டில் 20 சவரன் நகை, ரூ.1.20 லட்சம் பணம் கொள்ளை

Jun 12, 2019 09:28 PM 58

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் ஆசிரியர் வீட்டில் 20 சவரன் தங்க நகைகளும், ஒரு லட்சத்து 20 ஆயிரம் பணமும் திருடு போனதை அடுத்து போலீசார் விசாரனை நடத்தி வருகின்றனர்.

சிங்கம்புணரியில் வரதராஜன் ஈஸ்வரி தம்பதியர் பணிக்கு சென்று வீடு திரும்பியுள்ளனர். அப்போது, வீட்டின் கதவுகள் உடைக்கப்பட்டு பின்புற கதவு திறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் இருந்த 20 சவரன் தங்க நகைகளும், ஒரு லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் ரொக்க பணமும் திருடு போனது தெரியவந்தது. அவர்களின் புகாரையடுத்து, இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், கை ரேகை நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் உதவியுடன் கொள்ளையர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

இதேபோல், திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் அருகே, பூட்டிய வீட்டை உடைத்து, 3 லட்சம் ரூபாய் மற்றும் 7 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முஜிப்பர் ரகுமான் வெளியூர் சென்று வீடு திரும்பிய நிலையில், வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு நகை மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து, காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comment

Successfully posted