குறிசொல்வதாக கூறி நகை,பணம்,செல்போன் பறிப்பு

Mar 16, 2019 07:11 AM 39

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே குறிசொல்வதாக கூறி 50க்கும் மேற்பட்டோரிடம் நகை மற்றும் பணம் பறித்த கும்பலை போலீசார் கைது செய்தனர்

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே மாங்குடி கிராமத்தில் திண்டுக்கல் மாவட்டம் வேடச்சந்தூர் பகுதியை சேர்ந்த குறி பார்க்கும் குழு ஒன்று தங்கி தொழில் செய்து வந்துள்ளனர். இவர்கள் நடு சாமத்தில் வீடு வீடாக சென்று உங்களுக்கு சூனியம் வைத்து விட்டார்கள், நீங்கள் இரண்டு நாட்களில் இறக்கப் போகிறீர்கள் என்று கூறி பயமுறுத்தி உள்ளனர்.பின்னர் காலையில் சென்று பரிகாரம் கூறி அவர்களிடமிருந்து பணம், நகை, செல்போன் உள்ளிட்ட பொருட்களை வாங்கிச் சென்றுள்ளனர்.இதனிடையே மாங்குடி கிராமத்தை காலி செய்து விட்டு அடுத்த கிராமத்திற்கு சென்ற போது தான் தாங்கள் ஏமாற்றப்பட்டதை அவ்வூர் மக்கள் உணர்ந்துள்ளனர். இதையடுத்து பொதுமக்கள் அந்த கும்பலை பிடித்து காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர்.

Comment

Successfully posted