சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை உயர்வு!

Jul 30, 2020 10:13 PM 1096

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு 144 ரூபாய் உயர்ந்துள்ளது.

உலகளவில் கொரோனா தொற்றால் பொருளாதாரம் சரிந்து வரும் சூழலில், தங்கத்தின் மீதான முதலீடு அதிகரித்து வருகிறது. இதனால் தங்கம் விலையானது நாளுக்கு நாள் உச்சத்தை தொட்டு வருகிறது. 24 காரட் தூய தங்கம் கிராமுக்கு 20 ரூபாய் உயர்ந்து ஐந்தாயிரத்து 348 ரூபாய்க்கு விற்பனையாகிறது. சென்னையில் 22 காரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு 18 ரூபாய் உயர்ந்து ஐந்தாயிரத்து 93 ரூபாய்க்கும், சவரனுக்கு 144 ரூபாய் அதிகரித்து, 40 ஆயிரத்து 744 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் வெள்ளி ஒரு ரூபாய் 60 காசுகள் குறைந்து 70 ரூபாய் 20 காசுகளுக்கும், கட்டி வெள்ளி ஒரு கிலோ ஆயிரத்து 600 ரூபாய் குறைந்து 70 ஆயிரத்து 200 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Comment

Successfully posted