ஜார்க்கண்ட் சட்டப்பேரவை தேர்தல்: 2ம் கட்ட வாக்குப்பதிவு தொடக்கம்

Dec 07, 2019 08:43 AM 817

ஜார்க்கண்டில் சட்டப்பேரவை தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது.

81 தொகுதிகளைக் கொண்ட ஜார்கண்டில் 5 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. முதல்கட்டத் தேர்தல் கடந்த 30ம் தேதி 13 தொகுதிகளுக்கு நடைபெற்றது.

இந்தநிலையில், முதலமைச்சர் ரகுவர் தாஸ் போட்டியிடும் ஜாம்ஷெட்பூர் கிழக்கு தொகுதி உட்பட 20 தொகுதிகளுக்கான 2வது கட்டத் தேர்தல் இன்று காலை துவங்கியுள்ளது. காலை முதல் வாக்காளர்கள் வரிசையில் நின்று தங்கள் ஜனநாயக கடமையை நிறைவேற்றி வருகின்றனர். 42 ஆயிரம் வீரர்கள் பாதுகாப்பு பணிக்காக ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அமைதியாகவும், வெளிப்படையாகவும் தேர்தலை நடத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் தலைமை தேர்தல ஆணையம் ஏற்பாடு செய்துள்ளது.

Comment

Successfully posted