கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளும் ஜோ பைடன்

Dec 19, 2020 06:14 PM 2304

அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள ஜோ பைடன், வரும் 21ம் தேதியன்று கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அமெரிக்காவில் நாளுக்கு நாள் கொரோனா வைரசால் உயிரிழப்போரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அமெரிக்காவின் பைசர் நிறுவனம் தயாரித்துள்ள கொரோனா தடுப்பூசியை அவசர கால தேவைக்கு பயன்படுத்திக் கொள்ள அந்நாட்டு மருந்து கட்டுப்பாட்டு ஆணையம் அனுமதி வழங்கியது.

இதனையடுத்து, அந்நாட்டின் துணை அதிபர் மைக் பென்ஸ் கொரோனா தடுப்பூசியை செலுத்திக் கொண்டார். இந்த நிலையில், அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள ஜோ பைடன், வரும் 21ம் தேதியன்று கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள இருப்பதாக ஆட்சி மாற்றத்திற்காக அமைக்கப்பட்ட குழு தெரிவித்துள்ளது. தடுப்பூசி மீதான நம்பிக்கையை மக்கள் மத்தியில் அதிகரிக்கும் விதமாக அவர் இந்த தடுப்பூசியை செலுத்திக் கொள்ள இருப்பதாக அந்தக் குழு தெரிவித்துள்ளது.

Comment

Successfully posted