தந்தை-மகன் அடைக்கப்பட்டிருந்த சிறையில் நீதிபதி பாரதிதாசன் விசாரணை!

Jul 09, 2020 08:45 PM 362

சாத்தான்குளம் தந்தை-மகன் மரண வழக்கு தொடர்பாக கோவில்பட்டி கிளை சிறையில், குற்றவியல் நீதித்துறை நடுவர் பாரதிதாசன் விசாரணை மேற்கொண்டார். தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த ஜெயராஜ், பென்னிக்ஸ் கடந்த மாதம் 19-ம் தேதி சாத்தான்குளம் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு கோவில்பட்டி கிளைச் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில் உடல்நிலை பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பென்னிக்ஸ் மற்றும் ஜெயராஜ் அடுத்தடுத்து உயிரிழந்தனர். இந்த வழக்கு தொடர்பாக கோவில்பட்டி குற்றவியல் நீதித்துறை நடுவர் பாரதிதாசன், இன்று காலை 11.30 மணிக்கு கோவில்பட்டி கிளை சிறைக்கு சென்றார். ஜெயராஜ்-பென்னிக்ஸ் சிறையில் அடைக்கப்பட்ட நாளில் பதிவு செய்யப்பட்ட சிறை ஆவணங்களை பார்வையிட்டு அவர், சிறைத்துறை அதிகாரிகளிடமும் அதுதொடர்பாக விசாரணை நடத்தினார். சுமார் 20 நிமிட விசாரணைக்குப் பின் குற்றவியல் நீதித்துறை நடுவர் பாரதிதாசன் கிளை சிறையிலிருந்து சென்றார்.

Comment

Successfully posted