முடிவுக்கு வருகிறது நீதிபதி ஜோசப் நியமன சர்ச்சை

Aug 03, 2018 03:12 PM 372

உயர் நீதிமன்ற நீதிபதி ஜோசப்பிற்கு உச்ச நீதிமன்ற நீதிபதியாக பதவி உயர்வு வழங்க மத்திய அரசு மறுப்பு தெரிவித்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியது. வேறு ஒருவரின் பெயரை பரிந்துரைக்குமாறு மத்திய அரசு அறிவித்தும், இரண்டாவது முறை நடைபெற்ற கொலீஜியம் கூட்டத்திலும் நீதிபதி ஜோசப் பெயர் மீண்டும் பரிந்துரைக்கப்பட்டது.  இதனையும் மத்திய அரசு மறுத்தநிலையில் 3வது முறையாக அவர் பெயர் பரிந்துரை செய்யப்பட்டது. இந்த நிலையில் ஜோசப்பிற்கு உச்ச நீதிமன்ற நீதிபதியாக பதவி உயர்வு வழங்க மத்திய அரசு ஒப்புதல் வழங்க உள்ளது. இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது. சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, ஒரிசா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி வினித் சரண் ஆகியோருடன் இவருக்கும் பதவி உயர்வு வழங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
-----

Comment

Successfully posted