201 கலைஞர்களுக்கு கலைமாமணி விருது வழங்கும் விழா

Aug 13, 2019 08:43 PM 124

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் பெயரில், ஆண்டுதோறூம் 3 சிறப்பு கலைமாமணி விருதுகள் வழங்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

2011 ம் ஆண்டு முதல் 2018 ம் ஆண்டு வரை, கலைமாமணி விருதுபெற தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு விருது வழங்கும் விழா சென்னையில் நடைபெற்றது. கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற வண்ணமிகு விழாவிற்கு சபாநாயகர் தனபால் தலைமையேற்றார். விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு விழா மலரை வெளியிட்டார். நிகழ்ச்சியில் உரையாற்றிய முதலமைச்சர், கலைஞர்கள் நவீன காலத்திற்கேற்ப தங்களை மேம்படுத்திக்கொள்ள வேண்டுமென்று கேட்டுக்கொண்டார். கலைஞர்களின் கோரிக்கையை ஏற்று புதிய அறிவிப்புகளை வெளியிட்ட அவர், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் பெயரில், ஆண்டுதோறும் 3 சிறப்பு கலைமாமணி விருதுகள் வழங்கப்படும் என்று அறிவித்தார்.

Comment

Successfully posted