திருவாரூரில் கூட்டுறவு வங்கி நிர்வாகக்குழு தேர்தலில் அதிமுக அமோக வெற்றி

Aug 22, 2019 08:24 AM 64

திருவாரூரில் கமலாம்பிகா நகர கூட்டுறவு வங்கி நிர்வாகக்குழு தேர்தலில் அதிமுக அணியினர் அமோக வெற்றி பெற்றுள்ளனர்.

திருவாரூரில் கமலாம்பிகா கூட்டுறவு நகர வங்கி நிர்வாகக்குழு தேர்தல் தனியார் மண்டபத்தில் நடந்தது. இதில் 11 இயக்குநர் பதவிக்காக அதிமுக நகரச் செயலாளர் ஆர்.டி.மூர்த்தி தலைமையில் 9 பேரும், திமுக சார்பில் 8 பேரும் போட்டியிட்டனர். இதில் 2 இயக்குனர்கள் போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டனர். மீதமுள்ள 9 இடங்களில் அதிமுக அணியினர் வெற்றி பெற்றனர். இதனையடுத்து அதிமுகவினர் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் வெற்றியைக் கொண்டாடினர். வெற்றி அறிவிப்பு வந்தபிறகு மறைந்த முதல்வர்கள் அண்ணா மற்றும் எம்.ஜி.ஆர் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

Comment

Successfully posted