காபி கப்பில் பால் மூலம் ஃபெர்ன் லோகோ உருவாக்கிய கேன் வில்லியம்சன்!!!

May 12, 2020 09:25 AM 1162

ஊரடங்கு காரணமாக வீடுகளில் முடங்கி இருக்கும் விளையாட்டு வீரர்கள் தங்களது ஓய்வு நேரத்தை விதவிதமாக கழித்து வருகின்றனர். அவர்கள் வித்தியாசமாக செய்பவற்றை சமூக வலைதளங்களிலும் பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில், நியூசிலாந்து கிரிக்கெட் வீரர் கேன் வில்லியம்சன், காபி கப்பில் பால் மூலம் செடி இலை போன்ற தோற்றத்தை உருவாக்கும் வீடியோவை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். வெள்ளை நிற இலை போன்ற லோகோ, நியூசிலாந்தில் உள்ள கிரிக்கெட் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுக்களில் பயன்படுத்தப்படுகிறது. இந்நிலையில், கேன் வில்லியம்சனின் பதிவுக்கு பல்வேறு பிரபலங்களும் கமெண்ட் செய்து வருகின்றனர். பால் ஊற்றிய கப்பை கடைசியாக சற்று உயர்த்தி இருந்தால், லோகோ இன்னும் நன்றாக வந்திருக்கும் என, ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஸ்மித் கமெண்ட் செய்திருக்கிறார். இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலியின் பதிவில், பார்ப்பதற்கு நன்றாக இருக்கிறது என்று தெரிவித்துள்ளார். அதே சமயம், உங்களுடைய பேக் ஃபூட் பன்ச் போல் நேர்த்தியாக இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். 

Comment

Successfully posted