ஆன்லைன் வகுப்பு அலைபேசி, சிறுவனோ பப்ஜி சுகவாசி -கண்டிப்பாக நான் பேசி, கடைசியில் காணாமல் போனான் மகன் சர்ஜி...

Jun 18, 2021 01:33 PM 3295

கன்னியாகுமரி மாவட்டம் நித்திரவிளை பகுதியில் பப்ஜி விளையாடுவதை தந்தை கண்டித்ததால் 14 வயது சிறுவன் வீட்டிலிருந்து மாயமானது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

image

பாலாமடம் பகுதியை சேர்ந்த சர்ஜின் என்பவரின் 14 வயது மகன் 9 ஆம் வகுப்பு படித்து வருகிறார். சிறுவனுக்கு ஆன்லைன் வகுப்பிற்காக அவரது தந்தை ஆன்ட்ராய்டு மொபைல் வாங்கி தந்துள்ளார். ஆனால் சிறுவனோ, ஆன்லைன் வகுப்பில் கவனம் செலுத்துவதற்கு பதிலாக பப்ஜி விளையாட்டில் மும்மரமாக ஈடுபட்டுள்ளான். இரவு, பகல் பாராமல் எப்போதும் பப்ஜி விளையாட்டில் மூழ்கி இருந்துள்ளான். இதனை சிறுவனின் தந்தை கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த சிறுவன் வீட்டிலிருந்து வெளியேறி மாயமாகி உள்ளான். சிறுவன் விளையாட சென்றிருப்பான் என்று பெற்றோர் எண்ணியிருந்த நிலையில் இரவு நெடு நேரம் ஆகியும் வீடு திரும்பாததால் அவர்கள் கலக்கம் அடைந்தனர். இது குறித்து அவர்கள் அளித்த புகாரின் பேரில் போலீசார் மாயமான சிறுவனை தேடி வருகின்றனர்.


image

Comment

Successfully posted