காரைக்குடியில் இளைஞர் வெட்டிக்கொலை: குற்றவாளிகளை தேடும் பணியில் போலீசார் தீவிரம்

Nov 09, 2019 06:25 PM 146

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி ரயில் நிலையம் எதிரில் வசித்து வருபவர்கள் ஆறுமுகம் மற்றும் அவரது தம்பி பஞ்சவர்ணம். இதில் பஞ்சவர்ணம் காரைக்குடி அரசு மதுபான பாரில் வேலை பார்த்து வந்துள்ளார்.

கடந்த நான்கு மாதத்துக்கு முன்பு அவர் வேலையில் இருந்து நின்று விட்டார். நேற்று இரவு பஞ்சவர்ணத்துக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. அந்த அழைப்பை பேசுவதற்காக பஞ்சவர்ணம் வீட்டை விட்டு வெளியே வந்தார். வெளியே வந்து சிறிது நேரம் மரத்தடியில் நின்று பேசி கொண்டிருந்தார். அந்த சமயம் பார்த்து அவரிடம் ஒரு நபர் வந்து பேச்சு கொடுக்க ஆரம்பித்தார்.

பஞ்சவர்ணம் பேசிக்கொண்டிருக்கும் போது ஒரு கார் அவர் நிற்கும் இடத்திற்கு முன்பாக சட்டென்று வந்து நின்றது. அதில் இருந்த ஒரு நபர் கார் கதவை திறந்து வேகமாக வெளியே வந்து பஞ்சவர்ணத்தை சரமாரியாக வெட்ட ஆரம்பிக்கிறார் அவருடன் சேர்ந்து பேச்சு கொடுத்த நபரும் பஞ்சவர்ணத்தை வெட்டி கொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பி செல்கின்றனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் அருகில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ள காட்சிகளின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டதில். பஞ்சவர்ணம் கார்த்தி என்பவரிடம் 9 வருடங்களாக வேலை பார்த்து வந்தார். பஞ்சவர்ணத்தை அரிவாளால் கொலை செய்தது கார்த்தி என்பதை காவல்துறையினர் கண்டுபிடித்து அவரை தேடிவருகின்றனர்.

மேலும் இந்த கொலைக்கு காரணம் பெண் விவகாரமா அல்லது பணம் கொடுக்கல் வாங்கலா என பல்வேறு கோணங்களில் விசாரனை மேற்கொண்டுவருகின்றனர் வருகின்றனர்.

Related items

Comment

Successfully posted