கர்நாடகாவில் ஆட்சியை கவிழ்க்க பாஜக வியூகம்

Jan 11, 2019 10:00 AM 55

கர்நாடகாவில் மதச்சார்பற்ற ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் கூட்டணி ஆட்சியை கவிழ்க்க வியூகம் வகுத்துள்ளதாகவும் விரைவில் அங்கு ஆட்சி மாற்றம் நடைபெறும் என்றும் பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மதச்சார்பற்ற ஜனதா தளமும், காங்கிரசும் இணைந்து கர்நாடகாவில் 8 மாதங்களாக ஆட்சி நடத்தி வருகின்றன. ஆனால் இரு கட்சிகளின் எம்எல்ஏக்களுக்கு இடையில் சில கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. அவர்கள் நேரிடையாகவும் மறைமுகமாகவும் விமர்சித்து கொள்வது அதிகரித்துள்ளது.

அண்மையில் அங்கு அமைச்சரவை மாற்றியமைக்கப்பட்ட நிலையில் அமைச்சர் பதவி கிடைக்காத அதிருப்தி எம்எல்ஏக்கள் எதிராக திரும்பியுள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து கர்நாடகாவின் அதிருப்தி எம்எல்ஏக்களை இழுக்க பாஜக காய் நகர்த்தி வருவதாக தெரிகிறது. மக்களவை தேர்தலுக்குள் மாநிலத்தின் குமாரசாமி கூட்டணியை முறிக்க நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.

காங்கிரஸ் மட்டுமின்றி, மதச்சார்பற்ற அதிருப்தி எம்எல்ஏக்களையும் இழுக்க பாஜக மும்முரம் காட்டி வருகிறது. மாநிலத்தில் ஆட்சி மாற்றம் நிகழ்ந்து பாஜக ஆட்சி அமைந்தால், மக்களவை தேர்தலில் 28க்கு 22 தொகுதிகளை கைப்பற்றலாம் என பாஜக கருதுகிறது.

இதனிடையே, பாஜக எம்எல்ஏக்களை இழுக்க காங்கிரசும் வியூகம் வகுத்து வருகிறது. இதை தவிர்க்கும் வகையில் டெல்லியில் இன்றும் நாளையும் நடைபெறவுள்ள பாஜக தேசிய செயற்குழு கூட்டத்தில் கர்நாடக எம்எல்ஏக்கள் அனைவரும் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Comment

Successfully posted