கர்நாடக முதல்வர் குமாரசாமி ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல்

Jul 11, 2019 07:46 AM 170

கர்நாடகத்தில் ஆட்சி அமைக்க பெரும்பான்மை இல்லாத நிலையில் முதலமைச்சர் குமாரசாமி தனது பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கர்நாடகத்தில் காங்கிரஸ், மதசார்பற்ற தனதா தளம் கூட்டணி அரசு ஆட்சியமைத்து வருகிறது. இதனிடையே ஆளுங் கட்சிக்கு ஆதரவளித்த 3 எம்.எல்.ஏக்கள் தங்களது ஆதரவை திரும்ப பெற்றனர். இதனால் குமாரசாமி ஆட்சிக்கு சிக்கல் ஏற்பட்டது. இதனையடுத்து காங்கிரஸை சேர்ந்த 10 எம்.எல்.ஏக்களும் தங்கள் பதவியை ராஜினாமா செய்து சபாநாயகருக்கு கடிதம் எழுதியதால் அம்மாநில அரசியலில் பெரும் குழப்பம் நீடிக்கிறது. இதனால் முதலமைச்சர் குமாரசாமி பதவி விலக கோரி பாஜக சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது.

காங்கிரஸ் ஆட்சி அமைக்க உரிமை கோருவதால், மதச்சார்பற்ற ஜனதா தளம்- காங்கிரஸ் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. முதலமைச்சர் குமாரசாமி பதவி விலக உள்ளதாக தகவல் வெளியானதை அடுத்து, 10க்கும் மேற்பட்ட அதிருப்தி எம்.எல்.ஏக்கள் அமித் ஷா முன்னிலையில் பாஜகவில் இணைய உள்ளதாக கூறப்படுகிறது.

Comment

Successfully posted