கர்நாடகாவிலிருந்து தமிழகத்திற்கு வந்த ஜக்கி வாசுதேவ்

Sep 11, 2019 01:33 PM 65

காவேரி கூக்குரல் என்னும் தலைப்பில் மரம் வளர்ப்பை வலியுறுத்தி இருசக்கர வாகனத்தில் பேரணியாக வந்த ஜக்கி வாசுதேவுக்கு தமிழக எல்லையில் ஆயிரக்கணக்கானோர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

காவேரியை காக்க மரங்களை வளர்க்க வேண்டும் என்ற முழக்கத்துடன் கர்நாடகாவிலிருந்து தமிழகத்திற்கு பயணம் மேற்கொண்டுள்ள ஜக்கி வாசுதேவ் இருமாநில எல்லையை வந்தடைந்தார். தமிழக - கர்நாடக மாநில எல்லையான அத்திப்பள்ளியில் தமிழகத்தை சேர்ந்த அரசியல் பிரமுகர்கள், விவசாயிகள், ஆன்மீகவாதிகள் என்று ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

Comment

Successfully posted