கர்நாடகாவில் முழு அடைப்பு போராட்டம்... இயல்பு வாழ்க்கை பாதிப்பு

Feb 13, 2020 11:15 AM 982

வேலை வாய்ப்புகளில் உரிய இடஒதுக்கீடு கோரி  முழு கர்நாடகாவில் நடைபெற்று வரும் அடைப்பு போராட்டத்தால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் கன்னடர்களுக்கு உரிய இடஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி, கன்னட அமைப்புகள் இன்று ஒருநாள் வேலை நிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்துள்ளன.

பெங்களூரு உள்ளிட்ட முக்கிய நகரங்களில் பேருந்துகள் இயக்கப்பட்டாலும், டாக்சி மற்றும் ஆட்டோக்கள் இயக்கப்படவில்லை. இதனால் பயணிகள் கடும் சிரமம் அடைந்தனர். மாநிலத்தின் முக்கிய பேருந்து நிலையங்கள் வெறிச்சோடி காணப்பட்டன. வேலை நிறுத்தப் போராட்டத்தையொட்டி பெங்களூரு பல்கலைக்கழகம் இன்று நடைபெறவிருந்த தேர்வுகளை ஒத்திவைத்துள்ளது.

Comment

Successfully posted